பார்பாரா அசுகின்சு | |
---|---|
பிறப்பு | 1939 பெல்ஃபாசுட், டென்னசி, அமெரிக்கா |
வாழிடம் | ஃஅண்ட்சுவில்லி, அலபாமா |
துறை | வேதியியல் |
பணியிடங்கள் | மார்ழ்சல் விண்வெளி பறப்பு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | அலபாமா பல்கலைக்கழகம், ஃஅண்ட்சுவில்லி |
விருதுகள் | 1978ஆம் ஆண்டுத் தேசியப் புதுமைப்புனைவாளர் |
பார்பாரா எஸ். அசுகின்சு (Barbara S. Askins) (பிறப்பு: 1939) ஓர் அமெரிக்க வேதியியலாளர். போதுமான ஒளிபடாத ஒளிப்பட எதிர்நகல்களின் உருவத்தை மேம்படுத்தும் வழிமுறையைப் புதிதாகப் புனைந்தார். இம்முறையை நாசாவும் மருத்துவத் தொழில்துறையும் பயன்கொள்கின்றன. இது அசுகின்சுக்கு 1978ஆம் ஆண்டுக்கான தேசியப் புதுமைப்புனைவு பெருமையை ஈட்டித் தந்தது.
பார்பாரா அசுகின்சு (நியே சுகாட்) 1939இல் டென்னசியில் உள்ள பெல்ஃபாசுட்டில் பிறந்தார். முதலில் இவர் ஆசிரியராக இருந்து, பிறகு மகனும் மகளும் பிறந்த்தும் பள்ளியில் அறிவியல் கல்வியைத் தொடர்ந்தார். இவர் அண்ட்சுவில்லியில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் அறிவியல் இளவல் பட்டமும் அறிவியல் முதுவர் பட்டமும் பெற்றார்.
புதுமைப்புனைவு, புத்தாக்க மேம்பாட்டுக் கழகம் 1978இல் அசுகின்சை அவ்வாணடின் தேசியப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்தது. இவரே இத்தகைமையை முதன்முதலில் ஈட்டிய பெண்ணாவார்.
அசுகின்சு அமெரிக்க வேதியியல் கழகத்திலும் சிக்மா சி தகைமை ஆய்வுக் கழகத்திலும் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகத்திலும் உலக வருங்காலக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார்.
{{cite book}}
: |access-date=
requires |url=
(help)